×

பொன்னமராவதியில் 26 மையங்களில் புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் துவக்கம்

பொன்னமராவதி, டிச.10: பொன்னமராவதியில் கற்போம் எழுதுவோம் புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது. பொன்னமராவதி ஒன்றிய பள்ளிகளில் கற்போம் எழுதுவோம் புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் 26 இடங்களில் தொடங்கப்பட்டது. பயிற்சியை அந்தந்த மையங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். இதற்கான தன்னார்வலர்கள் பயிற்சி இரண்டு நாட்கள் பொன்னமராவதி வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. செம்பூதி ஊராட்சி மன்ற தலைவர் சவுந்தரராஜன், பொன்.புதுப்பட்டி குறுவள மைய தலைமையாசிரியர் நிர்மலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அடைக்கலம், ஊராட்சி செயலாளர் கோபால் ஆசிரியர் பயிற்றுநரர் அழகுராஜா, அங்கன்வாடி பணியாளர் சந்திரா, தன்னார்வலர் முத்துலெட்சுமி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் அனைவருக்கும் பயிற்சி கையேடு வழங்கப்பட்டது. செம்பூதி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார். பொன்னமராவதி ஒன்றியத்தில் 26 மையங்களில் கற்போம் எழுதுவோம் புதிய வயது வந்தோர் கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது. பயிற்சி மையத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மதனகுமார் செய்திருந்தார்.

Tags : Ponnamaravathi ,centers ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன